மன்னிப்பாயா…….
காதலை நாம தேடி போகக்கூடாது தானாவே அது நம்ம தேடி வரனும்........ விண்ணைதாண்டி வருவாயாவில் சிம்பு சொன்ன மாதிரி இந்த பாட்டு நல்லா இருக்குமா கேட்டு பார்க்கனும் அல்லது கேட்க கேட்க பிடிக்கும் என்றில்லாமல் ஒரு இனிமையான பாட்டு முதல்முறை கேட்கும்போதே தானாகவே மனதில் நுழைந்துக்கொள்ள வேண்டும். .......இதமாக இதயத்தை வருட வேண்டும்.
நல்ல இசை, பாடியவரின் குரல் இனிமை இவற்றுடன் பாடல்வரிகள் கொண்டே எப்பொழுதும் ஒரு பாடலை நான் ரசிக்கின்றேன். அப்படி நிறைய பாடல்கள் இருந்தும் தற்பொழுது என் மனதினை தொட்ட பாடல் மன்னிப்பாயா. பிடித்திருந்து விட்டு விலகிக்கொண்ட ஒரு பெண்னின் மன நிலையை அழகாக உணர்த்தும் பாடல். கேட்ட முதல் முறையே பிடித்துவிட்டது, குறிப்பாக பாடல் வரிகள் என்னை கவர்ந்துவிட்டது. ஒவ்வொரு முறை கேட்குபொழுது அந்த பாடலில் மூழ்கி நான் என்னை மறக்கிறேன்.
இந்த பாடலின் சிறப்பே இடையே வரும் திருக்குறள்கள் தான்.எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.தாமரை அவர்களின் வரிகளை மேலும் மெருகேற்றுகிறது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
காதலை(காதலனை)நினைத்து சிந்தும் கண்ணீர் போதுமே காதலை காட்டிக் கொடுத்து விட.........
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
காதல் வந்தாலே தனக்கென எதையும் வைத்து கொள்வார்களா காதலர்கள்………
புலப்பலென சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
காதலில் இதயமும் இதயமும் இணைவதுதானே அழகு........
பெண் :
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே……….
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…….
(ஒரு நாள்…)
ஆண் :
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே……
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே……..
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்.........
பெண் :
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே……….
ஆண் :
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்…)
பெண் :
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ?
போவாயோ கானல் நீர் போலே தோன்றி………
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்………
(ஒரு நாள்…)
(கண்ணே…)
மேலும் மேலும் உருகி உருகி...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?
மேலும் மேலும் உருகி உருகி...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?
ஒ...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ????????????
« ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ? » என்ற ஒற்றை வரியில் அவளின் மொத்த காதலும் « வரம் கிடைத்தும் தவர விட்டேன் » என்பதில் அவளின் புலம்பலும் « மன்னிப்பாயா » என்று கேட்பதில் காதல் வலியும் நன்றாகவே உணரமுடிகிறது.
ஜெஸ்ஸி மாதிரி இன்னும் எத்தனை பெண்கள் மன்னிப்பாயா என்று கேட்டு இருக்கிறார்களோ அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ....?!
Thursday, October 1, 2009
கேட்டதில் ரசித்தது !!!
எளிமையான வார்த்தைகள் ஆனால் ஆழமான அர்த்தங்கள் நிறைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற படம்பொக்கிஷம், எனக்கு மிகவும் பிடித்த இதோ அந்த கவிதையான காதல்வரிகள்……
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒலி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மவுனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உன்னை சொல்வேனே
நான் உன்னிடம், உயிர் நீ, என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய்சுகம் !
அன்புள்ள மன்னா
அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒலியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட !
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒலி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மவுனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உன்னை சொல்வேனே
நான் உன்னிடம், உயிர் நீ, என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய்சுகம் !
அன்புள்ள மன்னா
அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒலியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட !
Tuesday, September 15, 2009
கேட்டதில் ரசித்தது !!!
சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில், நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் அழகாய் பூக்குதே பாடல் மட்டுமே இதயத்தை வருடிச்செல்லும் இசையுடனும், அழகான கவிதை வரிகளுடனும் அமைந்துள்ளது. நான் மிகவும் ரசித்த அந்த பாடல்வரிகள் இதோ......
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே !
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஒ ஹோ ஹோ ..
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன்
உன்னாலே ..
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..
கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே
ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே
ஒ ஹோ ஹோ ..
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
ஒ ஹோ ஹோ ..
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல்
ஆவேனே ..
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..
ஏக்கம்
மதங்களைப் பற்றி எத்தனையோ கவிதைகளை படித்திருந்தாலும், ஏக்கம் என்ற தலைப்பில், நான் மிகவும் ரசித்தது இந்த கவிதையைதான்.
எப்போது
கிடைக்கும் ?
ஒரே நூலாய்
கீதை, குரான், பைபிள் !
எப்போது
கிடைக்கும் ?
ஒரே நூலாய்
கீதை, குரான், பைபிள் !
Friday, October 2, 2009
மவுன ராகம் !
விதைக்குள் மரம்
கருவுக்குள் உயிர்
மனதுக்குள் நீ !
விடியும்போது பகல்
மடியும்போது இரவு
இரவும் பகலும் நீ !
வேர்கள் வெளியே
கிளைகள் உள்ளே
என் காதல் கனிமரங்கள் !
வாசமுள்ள வார்த்தைகள்
ஆனால்
ஓசைகள் இல்லை
இது ஒரு
மவுன ராகம் !
Tuesday, September 8, 2009
வலி தூரப் பயணம் !
விவரங்கள்
கண்முன் வலம் வரும் காலம் முதலே
வரிகளை விடவும்
அதிகம்
வலிகளை வாசித்திருக்கிறேன் !
நீ தந்த
இந்த பிரிவினைக் கூட
ஆத்திச்சூடி
படிக்கும்போதே
அனுபவித்திருக்கிறேன் !
"கால வண்டி
முன்னோக்கிச் செல்ல
பிரிவு சுமந்த மனம்
பின்னோக்கிச் செல்ல
என்ன முரண்பாட்டுப்
பயணமிது !"
எவ்வளவு தூரம் சென்றாலும்
புறப்பட்ட இடத்தில் வந்து
நிற்காமலா சென்றுவிடும்
பூமி உருண்டை என்பதைப்
புலப்படுத்தும் காலம் !
ஆட்டுக்கல்லினூடே
அகப்பட்ட
ஆட்காட்டி விரலாய்
பிழியப்பட்ட வலிகளை
நாட்காட்டி காகிதமாய்
கிழித்துப் போடுகின்றன
தொடர் பிரிவுகள் !
வேலிமுள் கிழிக்கிறதென்று
வழிமாற்றிக் கொள்வதில்லை
காற்று !
குழியில் போட்டு
புதைத்தாலும்
கிளை விடுவதையே
குறிக்கோளாய்
கொண்டிருக்கும்
விதை !
எத்தனை பிரிவுகள்
தொடர்ந்தாலும்
வழியெங்கும்
வலிகள் சுமந்து
சுகமாய்ச் செல்லும்
என்
வலி தூரப் பயணம் !
Monday, September 7, 2009
பெண் !?!
உணர்ச்சிகள் உறைந்த
பனிச் சிகரம் !
மர்மங்கள் நிறைந்த
புதினம் !
துன்பங்கள் துயில் கொள்ளும்
தூளி !
அதிசயங்கள் ஆயிரம் உடைய
ஆகாயம் !
வினாக்கள் கோடி கொண்ட
விடை !
பெண் !?!
பனிச் சிகரம் !
மர்மங்கள் நிறைந்த
புதினம் !
துன்பங்கள் துயில் கொள்ளும்
தூளி !
அதிசயங்கள் ஆயிரம் உடைய
ஆகாயம் !
வினாக்கள் கோடி கொண்ட
விடை !
பெண் !?!
No comments:
Post a Comment