Free Typing Work Daily Earn Money

சமையல் குறிப்பு/Videos


Samayal kurippu | சமையல் குறிப்பு | Tamil Recipes:














ஸ்பெஷ‌ல் கேக்!!!

                ல்லோருமே ஃபெஸ்டிவிட்டி மூட்ல இருப்பீங்கன்னு நினைகிறேன். இதோ நாளை கிறிஸ்துமஸ், தொடர்ந்து ஒரு வாரத்தில் புதுவருடம் என்று ஜாலிதான்! இவற்றை கொண்டாடிட உலகெங்கு பலவிதமான ஏற்பாடுகள்....  சந்தோஷத்துடன் புத்தாடைகள் வாங்குவதில் ஆரம்பித்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிப்ட்ஸ் வாங்குவதும், ஸ்டார், சீரியல் லைட்ஸ்...எல்லாம் கொண்டு வீட்டை அலங்கரிப்பதும், last but not least... என்பதை போல கடைசியில் விதவிதமான சாப்பாட்டு வகைகளோடு இனிதே முடிவுக்கு வருகிறது.... இந்த இனிய விழாக்கள்!!!

நானும் என் ப‌ங்குக்கு எல்லாம் முடித்து, இறுதியாக‌ இன்று கிறிஸ்தும‌ஸ் ஸ்பெஷ‌லாக‌ ர‌வை கேக்கும் செய்தாகிவிட்ட‌து. சுல‌ப‌மான‌ அந்த‌ குறிப்பை கீழே கொடுத்துள்ளேன், ட்ரை பண்ணிபாருங்க‌!


தேவை :

ரவை - 500g
சர்க்கரை - 500g
வெண்ணெய் - 250g
முட்டை  - 8 
வெண்ணிலா(பவுடராக) - 8g
 பேக்கிங் சோடா - 10g
முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்                
ரம் - 15cl



செய்முறை :

  • முந்திரி திராட்சை வெண்ணிலா சேர்த்து ரம்மில் ஒரு ஐந்து நாட்கள் முன்பே ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

  • முதலில் ரவையை உருக்கிய வெண்ணையில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் முன்பே ஊற வைத்துவிட‌வும்.


  • முட்டைகளை மஞ்சள் தனியாகவும் வெள்ளை தனியாகவும் பிரித்துக்கொண்டு, வெள்ளையை மட்டும் நன்றாக நுரைத்துவரும் வரை அடித்துக்கொள்ளவும்.
  • மஞ்சள் முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு, அவற்றுடன் சர்க்கரை, வெண்ணெய், ஊறவைத்த முந்திரி திராட்சை ரம், மற்றும் வெண்ணிலா,  பேக்கிங் சோடா, தட்டிய ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
  • இவற்றுடன் ரவை கொஞ்சம் வெள்ளை முட்டை கொஞ்சம், என்று இரண்டையும் மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையை ஓவனில் சரியாக 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து bake செய்து எடுத்தால் சூப்பரா ஒரு ரவை கேக் ரெடி!(நிச்சயமா இந்த கேக்கில் ரம் வாசனை வராது)!!!



கிறிஸ்துமஸ் கொண்டாடும் அணைவருக்கும்
என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!!





1 comment: